விரைவு இணைப்பு
 • Adarsh About Banner

தன்னிகரற்ற பல்-மாநில கூட்டுறவுக் கடன் சங்கம்

ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சங்கம் லிமிடெட் , ஒவ்வொரு விதத்திலும் தன்னிகரற்ற கூட்டுறவு கடன் சங்கமாய் உருவெடுத்துள்ளது.. ஆதர்ஷ் தனது பணிகளை 1999 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் உள்ள உள்ளூர் மக்களுக்கு குறிப்பாக விவசாய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பணியாற்றுவதில் துவக்கியது. நாட்டின் கிராமப்புற பகுதிகளிலுள்ள சமுதாயத்தின் பலவீனமான பிரிவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் பணியாற்றும் ஆதர்ஷ், சமீபத்திய உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்து ஏற்க எப்போதும் தயங்கியதில்லை. இந்த அச்சமற்ற அணுகுமுறையைத் தழுவியதன் விளைவாக தனது சொந்த மொபைல் பயன்பாட்டைத் தொடங்கி அதன் மூலம் தனது வணிக நடவடிக்கைகளில் 99% க்கும் அதிகமானவற்றை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கூட்டுறவுக் கடன் சங்கமாக பெயர் பெற்றுள்ளோம்.

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் பல-மாநில கூட்டுறவுக் கடன் சங்கம் எனும் அந்தஸ்தை எங்களுக்கு அளித்தது. உறுப்பினர்களுக்கே சொந்தமான, உறுப்பினர்களின் நன்மைக்காகப் பணியாற்றும் நிறுவனம் எனும் பெருமையை ஆதர்ஷ் பெற்றுள்ளது. பல இடங்களிலுள்ள கிளைகளைக் கொண்டு, ஆலோசகர்களின் திறன் மற்றும் வைப்பு நிதி சேகரிப்பின் மற்ற கூட்டுறவுச் சங்கங்களை ஒப்பிடுகையில் ஆதர்ஷ் முதல் நிலையில் உள்ளது. 800 க்கும் அதிகமான கிளைகள், 2 லட்சம் உறுப்பினர்கள், 3.7 லட்சம் ஆலோசகர்கள் என 8,410 கோடி வைப்பு நிதி கொண்டு இந்தியாவின் கூட்டுறவு சங்ககளுக்கு சக்தியளிக்கும் நிறுவனமாகத் திகழ்வதில் பெருமை கொள்கிறோம்..

தலைமைத்துவம்

திரு.முகேஷ் மோடி

திரு.முகேஷ் மோடி

நிறுவனர்

ராஜஸ்தானில் கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்று பின் இந்தியா முழுமைக்கும் அதை எடுத்துச் சென்ற பெருமை திரு. முகேஷ் மோடியைச் சாரும். அவருடைய திறமையான தலைமைத்துவத்தின் கீழ் ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கம், பல-மாநிலக் கூட்டுறவு சமுதாயம் எனும் நிலைப்பாட்டைப் பெற்றது.

ராஜஸ்தானில் உள்ள சிரோஹி என்ற எளிமையான கிராமத்தை சேர்ந்த இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர், தேசிய கூட்டுறவுக் கடன் சங்கங்களின் தேசிய துணைத்தலைவர், தேசிய செயலாளர், சஹாகர் பாரதி எனும் பல நிலைகளில் திறம்பட பணியாற்றியவர்.

திரு. ராகுல்மோடி

திரு. ராகுல்மோடி

நிர்வக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.

ஏ.சி.சி.எஸ்-ன் அனைத்திந்திய செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதோடு அதன் வளர்ச்சிக்காண திட்டங்களையும் பணியையும் திரு. ராகுல் மோடி கவனித்துக் கொள்கிறார். தனது தந்தையார் மேற்கொண்டிருந்த பணிகளை தற்போது அவரது ஆசியுடன் பொறுப்பேற்று வெற்றிகரமான வளர்ச்சி பாதையில் ஆதர்ஷை வழிநடத்தி வருகிறார். சார்டட் ஆக்கவுண்டன்ட், PE ஃபண்டிங் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் துறைகளில் HDFC Bank, YES Bank மற்றும் Ladder up Investment Bank போன்ற முக்கிய வங்கிகளில் முதலிட்டு துறையில் பல வருட அனுபவம் பெற்றுள்ளார்

சமூக ஊடகத்தின் வழி திரு. ராகுல் மோடியுடன் இணைந்திடுங்கள்!

தொலைநோக்கு

உறுப்பினர்களிடையே ஒருங்கிணைந்த முன்னேறத்தின் அவசியத்தையும் சேமிப்பின் அவசியத்தையும் மூலம் அவர்களது சமூக மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவது.

குறிக்கோள்

உயர் தரநிலை கொண்ட, உறுப்பினர் சார்ந்த, சேவையை மையப்படுத்திய செயல்முறைகள் மூலம் கூட்டுறவு இயக்கத்தில் முன்னோடியாகத் திகழ்ந்து முன்னேறும் இந்தியாவிற்கு வழிவகுத்தல்.

முக்கியக் கோட்பாடுகள்

 • சட்டப் பாதுகாப்பு

 • முழுமையான நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை

 • வலுவான தொழில்நுட்பத் தரநிலை

 • உயர்தர பணிப்பயிற்சி தரநிலை

 • நம்பகமான ஆலோசகர் வலையமைப்பு

அர்ப்பணிப்பு

திறமையான ஊழியர்களைப் பணியமர்த்துவது மற்றும் ஆரோக்கியமான உறுப்பினர்களை சேர்ப்பது மட்டுமல்லாமல், உறவுகளை உருவாக்கி வளர்ப்பதில் பலமான நம்பிக்கை வைத்துள்ளோம். எமது நீட்டிக்கப்பட்ட குடும்பத்தின் ஒரு பகுதியாக அனைவரும் ஏற்கப்பட்டு சார்புத்தன்மையின்றி சமநிலையோடு பேணப்படுகிறார்கள். அத்தோடு நாங்கள் புனிதமாகப் பேணிக் கடைப்பிடித்துவரும் கீழ்கண்ட நடைமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்:

Adarsh Rewards based on performance

செயல்திறன் சார்ந்த வெகுமதிகள்

Adarsh Inculcating ownership

உரிமையேற்பதை ஊக்குவித்தல்

Adarsh Openness in communication

வெளிப்படையான தகவல் பரிமாற்றம்

Adarsh Training for Career Growth

பணி மேம்பாடுக்கு உகந்த பயிற்சிகள்

Adarsh Responsibility towards society

சமூகம் சார்ந்த கடமைகள்

Adarsh Equality in opportunities

சமநிலையான வாய்ப்புகள்

நிறுவனப் பங்குதாரர்கள்

இந்தியா முழுவதுமான எங்கள் அன்றாட நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்களைப் பூர்த்தி செய்யும் நோக்கில், இந்திய மற்றும் உலகளவில் தலைசிறந்த நிறுவனங்களுடன் பல்வேறு மூலோபாய கூட்டு மற்றும் கூட்டு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியுள்ளோம். இந்தக் கூட்டணி எங்கள் வணிகத் தளத்தை விரிவுபடுத்துவதோடு மட்டுமின்றி ஒரு நிலையான எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தையும் அமைக்கிறது.

800+

நாடு முழுவதும் கிளைகள்

3,70,696

இன்றைய நிலவரப்படி ஆலோசகர்கள் (30th Apr, 2018)

20,61,562

இன்றைய நிலவரப்படி உறுப்பினர்கள் (30th Apr, 2018)

வல்லமை

தொழில்நுட்ப வல்லமை

இந்தியாவிலுள்ள கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் பொதுமக்களிடையே தங்களை நம்பிக்கையான நிதிசார் மாற்றுத் துறை என ஸ்தாபிக்க நிறுவனத் தர தொழில்நுட்பம் சார்ந்த கணினிப்படுத்துகை அவசியம். இதை மனதில் கொண்டு எங்கள் தரவு மையத்தை நிறுவி நிர்வகிக்கும் பொறுப்பை உகந்த நிபுணத்துவம் மற்றும் உயர் சேவைத் திறன் கொண்ட கிளவுட் சொல்யூஷன்ஸ் ப்ரோவடைரான ஆதர்ஷ் தாட் வொர்க்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (ATW) இடம் ஒப்படைத்துள்ளோம். குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் SMEக்கள், வங்கிகள், சொல்யுஷன் டெவலப்மென்ட் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு உகந்தபடி மிகச்சிறந்த பாதுகாப்பு அமைப்புகளுடன் உள்ள அவர்களது தரவு மையம் அடுக்கு 2+ மதிப்பீடு பெற்றதாகும்.

Adarsh Technical Strengh

தரம்

துவங்கப்பட்ட நாளிலிருந்தே நாங்கள் பின்பற்றும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் மிக உயர்ந்த ]தரத்தை உறுதி செய்வதை கொள்கையாகக் கடைபிடித்து வருகிறோம்.

CSR செயல்பாடுகள்

நம்மிடம் இருப்பதைக் கொண்டு நம் சமுதாயத்தை மேம்படுத்தி வாழ்வேண்டும் எனும் கொள்கையில் முகேஷ் மோடி அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார் சலுகை குன்றிய பிரிவினருக்கு ஆதரவளித்து அவர்களை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வது துவங்கிய நாள் முதலே ACCSன் வணிகத் தத்துவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்கி வருகிறது.
பல்வேறு முயற்சிகள் மூலம் தேசிய அக்கறை சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு, நாடெங்கிலும் உள்ள சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு மாதிரி சமூக அமைப்பாக விளங்கும் நோக்கோடு 2015 ஆம் ஆண்டில் ஆதர்ஷ் அறக்கட்டளை (ACF) நிறுவப்பட்டது. ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் ஆதரவுடன் சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரங்கள் மற்றும் பேரழிவு நிவாரணப் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை ACF மேற்கொண்டுள்ளது.

எங்கள் CSR செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்

 • 500க்கும் அதிகமான இரத்த தான முகாம்களின் மூலம் 45,000 க்கும் மேற்பட்ட இரத்த தான வழங்குநர்களை பதிவு செய்துள்ளோம்,
 • சிரோஹியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையை தத்து ஏற்றுக்கொண்டுள்ளோம்
 • தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறோம்.
 • உதய்பூர், சிரோஹி மற்றும் மட். அபுவில் ஆம்புலஸ் வசதி செய்துள்ளோம்
 • பல்வேறு பள்ளி மற்றும் விடுதிகள் கட்டங்கள் அமைக்க உதவி செய்துள்ளோம்
 • பல்வேறு பள்ளிகளுக்கு பேருந்துகளை நன்கொடையாக அளித்துள்ளோம்.
 • திறன் மேம்பாட்டுக்காக 1700+ இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு 500+ இளைஞர்கள் பணி பெற உதவியுள்ளோம்
 • 10 இடங்களில் பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டன.
 • 3 இடங்களில் தையல் நிலையங்கள் அமைக்கப்பட்டது
 • தண்ணீர் கிடுங்குகள்அமைப்பது ஆங்கன்வாடி குழந்தைகளுக்கு பொம்மைகள் நன்கொடையாக அழிப்பது போன்ற செயல்கள்.
 • அபு சாலை, அஜ்மீர், சிரோஹி மற்றும் உதய்பூர் ஆகிய 4 இடங்களில் தானிய / உணவு கிடுங்குகள்அமைத்துள்ளோம்.
 • சமுதாயக் சமையலறைகளை அமைத்தல் மற்றும் மாற்றுத் திறநாளிகளுக்கு ஆதரவு
 • அவசரகால மற்றும் பேரழிவு நிவாரண பணிகள்
 • இரத்த தானத்திற்கான பயன்பாட்டை துவக்கியுள்ளோம்
 • ஸ்ரீமதி சுசீலா தேவி பிரகாஷ்ராஜி மோடி பாலிகா ஆதர்ஷ் வித்யா மந்திரில் ஆன்லைன் கல்வி துவக்கியுள்ளோம்.

© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.