விரைவு இணைப்பு

கூட்டுறவு இயக்கத்தில் முன்னணி – டிஜிட்டல் வழி!

நமது உறுப்பினர்கள், ஆலோசகர்கள்/ களப்பணியாளர்களும் பயன்பெறும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்தி புதுமையான தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குவதில் ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு கடன் சங்கம் லிமிடட் முக்கிய கவனம் செலுத்துகிறது. காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தை உபயோகிப்பதால் நிறுவனங்கள் வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறி புதிய வாய்ப்புகளை உருவாக்கி உறுப்பினர்கள் / வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய முடியும் என நாங்கள் உண்மையாக நம்புகிறோம்.

ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சங்கம் பல சந்தர்ப்பங்களில் இந்திய கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னேற்றப் பாதையை எடுத்துக்காட்டும் வழிகாட்டியாக . இருந்து வந்துள்ளது. இருப்பினும், 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆதர்ஷ் மணி எனும் மொபைல் பயன்பாட்டின் அறிமுகத்துடன், நாங்கள் புதிய இந்தியாவில் முன்மாதிரியாக கூட்டுறவு துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

நவீன வணிக நிதி நிறுவனங்களின் அவசியங்களுக்கேற்ப தீர்வுகளை உருவாக்கி உறுப்பினர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையாக ஆதர்ஷ் மணி மொபைல் பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிதான மற்றும் திறனுள்ள செயல் தளத்தின் மூலம் உறுப்பினர்களின் தகவலை அணுகும் விதத்தை மேம்படுத்துவதற்கும், எங்கள் ஆலோசகர்கள்/ களப் பணியாளர்கள் / உறுப்பினர்கள் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள உரிமையளிப்பதற்கும் எங்களுக்கு உதவுகிறது.

‘ஆதர்ஷ் மணி’ மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தி இந்தியாவிலுள்ள கூட்டுறவுக் கடன் சங்கங்களில் முதல் முதலாக மொபைல் பயன்பாடு துவக்கிய பெருமையை நாங்கள் ஈட்டியுள்ளோம். தற்போது, எங்கள் பரிவர்த்தனைகளில் 99 சதவிகிதத்திற்கும் மேலானவை ஆதார்ஷ் மணி மொபைல் பயன்பாடு மூலமாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகின்றன. இது ஒரு மிகப் பெரிய சாதனையாகும்.

எங்கள் மொபைல் பயன்பாடுகளில் இரண்டு வகைகள் உள்ளன:
1. உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கான ஆதர்ஷ் மணி
2. ஆலோசகர்கள் பயன்பாட்டிற்கான ஆதர்ஷ் மணி

உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கான ஆதர்ஷ் மணி

டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் ஆற்றலை ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சங்கம் லிமிட்டடின் அனைத்து உறுப்பினர்களும் அனுபவிக்க உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கான ஆதர்ஷ் மணி வகை செய்கிறது. எளிதாகப் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆதர்ஷ் கிரெடிட் பயன்பாடு, உறுப்பினர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எங்கும் எந்நேரத்திலும் 24×7 உடனுக்குடன் செயல்படுத்த உரிமையளிக்கிறது.

இப் பயன்பாட்டின் மூலம், உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கு இருப்புகளைச் சரிபார்ப்பது, சொந்த அல்லது வேறு கணக்குகளுக்கு நிதிப் பரிமாற்றம் செய்வது மற்றும் மொபைல் ஃபோன், டேட்டா கார்ட் மற்றும் டி.டி.எச் ஆகியவற்றிற்கு ரீசார்ஜ் செய்வது, மொபைல் பில்களுக்கு கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். ரீசார்ஜ் புள்ளிகள் / கேஷ் பேக் போன்ற சலுகைகளும் உறுப்பினர்கள் பெறலாம். நம் நாட்டை டிஜிட்டல் இந்தியாவாக உருவாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்குத் துணை நிற்பதை ஆதர்ஷ் தன் கடமையாகக் கருதுகிறது. இதன் முயற்சியாக உருவான ஆதர்ஷ் மணி மொபைல் பயன்பாட்டின் மூலம் உறுப்பினர்கள் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளை இணைக்க உதவுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

Adarsh for Members
Adarsh for Advisor

ஆலோசகர்கள் பயன்பாட்டிற்கான ஆதர்ஷ் மணி

எமது ஆலோசகர்கள் எந்நேரத்திலும் எவ்விடத்திலும் பணியை செவ்வனே நிறைவேற்ற உரிமையாக்கும் சக்தியாக ‘ஆலோசகர்கள் பயன்பாட்டிற்கான ஆதர்ஷ் மணி செயலி’ விளங்குகிறது. ஒப்புதல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய அவசியம் போன்றவற்றை குறைத்தும் ஆலோசகர்கள் தங்கள் பணியை செய்து முடிக்கத் தேவையான அம்சங்களைக் கொண்டும் இப்பயன்பாடு ஆலோசகர்கள் சுயமாகப் பணியை முடிக்க வகை செய்கிறது. மேலும், இந்த 24 × 7 பயன்பாட்டை உபயோகிப்பதன் விளைவாக எங்கள் ஆலோசகர்கள் மற்ற போட்டி நிறுவன ஆலோசகர்களைக் காட்டிலும் முன்னிலையில் திகழ உதவுகிறது.

தினசரி வணிக நடவடிக்கைகளான சேகரிப்புகள், புதுக்கணக்கு திறப்பு மற்றும் நிதிப் பரிவத்தனை போன்ற அம்சங்கள் மீது கவனம் கொண்டு ஆதர்ஷ் மணி பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது சொல்லப்போனால், இந்த பயன்பாட்டிற்குக் கிடைத்த பெரும் வெற்றியின் பயனாக உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்களின் எண்ணிக்கையில் கணிசமான வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

ஹேப்பி ராணவின் உவகையை உணர்ந்துபாருங்கள்

பல புதிய அம்சங்களோடு சமீபத்தில் வெளியான ஆதர்ஷ் மணி மொபைல் பயன்பாட்டின் மூலம் ஹேப்பி ராணாவால் பல காரியங்களை எளிதாக நிறைவற்றமுடியும். இனி பில்களுக்கு கட்டணம் செலுத்தவது, பேருந்துச் சீட்டு வாங்குவது போன்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே சென்று நீளமான வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இனி இல்லை, பொருள்கள் வாங்க பெருந்தொகையை தனது பர்ஸில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. புதிய ஆதர்ஷ் மணி மொபைல் பயன்பாடு போன்ற ஒன்றையே எங்கள் உறுப்பினர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்! எங்கள் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் இவற்றால் பயன்பெறும் உறுப்பினர்களின் முழு ஆதரவோடு இந்தியாவை நிதியியலை உள்ளடைக்கிய நாடாக மாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

புதிய ஆதர்ஷ் மணி பயன்பாட்டை ஆய்ந்தறியுங்கள்

உறுப்பினர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் வழியாக தங்கள் நிதிப் பரிவர்த்தனைகளை எளிதாக நிறைவேற்றும் வகையில் பல அம்சங்களைக் கொண்ட விரைவான, பாதுகாப்பான மற்றும் எளிதான கருவியாக ஆதர்ஷ் மணி பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. கணக்கு இருப்பைச் சோதித்தல், பில்கள் செலுத்துவது, நிதிப் பரிமாற்றம், மொபைல் வேல்ட் டாப்-அப் செய்வது, போன்ற மற்றும் பல பணிகளை 24 × 7 எந்நேரத்திலும், எங்கிருந்தும் நிறைவேற்றலாம். டச் ஐடி, க்யூ.ஆர் கோட் ஸ்கேனிங், யூபிஐ கேட்வே மற்றும் இ-கே.வொய்.சி போன்ற .சிறப்பான அம்சங்களும் இந்தப் பயன்பாட்டில் உண்டு. இந்தப் பயன்பாட்டைக் கொண்டு நீங்கள் எளிதாக நிறைவேற்றக் கூடிய பணிகளைப் பற்றி இந்த காணொளி மூலம் அறியுங்கள்.

* புதிய அம்சங்கள் கொண்ட எங்கள் புதிய மேம்படுத்தப்பட்ட பயன்பாட்டை இப்போதே பதிவிறக்குங்கள் அல்லது புதுப்பியுங்கள்

ஆதர்ஷ் கிரெடிட் பயன்பாடு

இந்தியாவிலுள்ள அனைத்து கூட்டுறவுக் கடன் சங்கங்களோடு ஒப்பிடும்போது தனக்கென மொபைல் பயன்பாட்டை உருவாக்கியுள்ள முதல் சங்கம் என்ற பெருமையை ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு கடன் சங்கம் பெற்றுள்ளது. . உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களுக்காக ஆதர்ஷ் மணியை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆதர்ஷ் கிரெடிட் இந்த வெற்றிக்கான வெற்றியை நோக்கி மேலும் முன்னேறிச் சென்றுள்ளது. ஏராளமான சக்திவாய்ந்த அம்சங்கள் கொண்டு இந்த மொபைல் பயன்பாடு தனித்தன்மையோடு விளங்குகிறது.

புதுக் கணக்கு திறப்பு, முதலீடுகள் மற்றும் பிற நிதி பரிவர்த்தனைகள் போன்ற பல்வேறு நிதிய நடைமுறைகளைச் சுலபமாக மேற்கொள்ள வகை செய்வதன் மூலம் லட்சக்கணக்கான உறுப்பினர்களின் பணியை இது எளிதாக்கியுள்ளது. இந்த பயன்பாட்டின் வழியாக டிடிஎச், டேட்டா கார்டுகள், மொபைல் போன் போன்றவற்றிக்கு ரீசார்ஜ்களை செய்யவும் கட்டணம் செலுத்தவும் உரிமையளிக்கிறது. ஆதர்ஷ் மணி பயன்பாடு மூலம் பயனர்கள் நிகழ் நேரத்தில் 24X7 பரிவர்த்தனைகளை மேற்கொள்ளமுடியும். இந்தப் பயன்பாட்டின் மூலம், ஆதர்ஷ் கடன் கூட்டுறவு சங்கம் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதில் தன் பங்கை நிறைவேற்றியுள்ளது.

உரிமைத்துறப்பு: அனைத்து நிதிசார் பொருள்கள் மற்றும் சேவைகள் பிரத்யேகமாக ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே

© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.