விரைவு இணைப்பு
Adarsh Daily Deposite

தினசரி வைப்புத் திட்டம்

சிறுதுளி பெரு வெள்ளம் எனும் முதுமொழியின் வழியில் தினசரி சிறுகச் சிறுகச் சேமிப்பதேதினசரி வைப்புத் திட்டம்  எனும் எங்கள் பிரபலத் திட்டமாகும். குறைந்தபட்சத் தொகையாக ரூ.10  தினசரி சேமித்து அத்தொகைக்கு கவர்சிகரமான வட்டியும் ஈட்டுவதே இத்திட்டத்தின் சிறப்பு. இத்திட்டம் பிக்மி சேமிப்பு என்ற பெயரில் பிரபலமான ஒன்றாகும்.

 காலம் (மாதங்களில்)வட்டி விகிதம் (வருடாந்திர %)
128.00
2410.00

குறைந்தபட்ச சேமிப்புத் தொகை ₹ 10 பிறகு  ₹ 5ன் மடங்குகளில்
மே 03, 2017 முதல் அமலில் உள்ள வட்டி விகிதம்
தினசரி விகிதத்தில் வட்டி வழங்கப்படும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தினசரி வைப்பு நிதியின் காலவரை என்ன?

தினசரி வைப்புத் திட்டத்திற்கு குறைந்த பட்சம் 1 வருடம் மற்றும் அதிக பட்சம் 2 வருடங்கள்.

தினசரி வைப்புத் திட்டத்தில் குறைந்த பட்ச சேமிப்புத் தொகை என்ன?

குறைந்தபட்ச சேமிப்புத் தொகை ₹ 10 பிறகு  ₹ 5ன் மடங்குகளில்

தினசரி வைப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் என்ன??

1 வருட சேமிப்புக்கு  8%  மற்றும் 2 வருட சேமிப்பிற்கு  10%

தினசரி வைப்புத் திட்டத்தில் காலத்திற்கு முன்பே முதிர்வு செய்யும் வசதி உண்டா??

காலத்திற்கு முன்பே முதிர்வு செய்யும் வசதி கீழ்கண்ட விதிகளின் படி வழங்கப்படுகிறது
(A) DDS 01 வருடம்:-

  • <= 03 மாதங்கள் → வசதி இல்லை
  • > 03 முதல் 05 மாதங்கள் →  வட்டி வழங்கப்படமாட்டாது. சேவைக் கட்டணம் 3% மற்றும் எழுதும் பொருள்களுக்கான செலவு ரூ.30 வசூலிக்கப்படும்.
  • > 5 முதல் 7 மாதங்கள் → வட்டி வழங்கப்படமாட்டாது. எழுதும் பொருள்களுக்கான செலவு ரூ.30 வசூலிக்கப்படும்.
  • >07 முதல் 09 மாதங்கள் → 3% வட்டி வழங்கப்படும் மற்றும் எழுதும் பொருள்களுக்கான செலவு ரூ.30 வசூலிக்கப்படும்
  • >09 முதல் 11 மாதங்கள் → 4% வட்டி வழங்கப்படும் மற்றும் எழுதும் பொருள்களுக்கான செலவு ரூ.30 வசூலிக்கப்படும்
  • >11 முதல் 12 மாதங்கள் → 5% வட்டி வழங்கப்படும் மற்றும் எழுதும் பொருள்களுக்கான செலவு ரூ.30 வசூலிக்கப்படும்

 (B)DDS 02 வருடங்கள்:-

  • <= 13 மாதங்கள் → வசதி இல்லை
  • >13 முதல் 18மாதங்கள் →3% வட்டி வழங்கப்படும் மற்றும் எழுதும் பொருள்களுக்கான செலவு ரூ.30 வசூலிக்கப்படும்
  • >18 to 24 மாதங்கள் → 4% வட்டி வழங்கப்படும் மற்றும் எழுதும் பொருள்களுக்கான செலவு ரூ.30 வசூலிக்கப்படும்

தினசரி வைப்புத் திட்டத்தின் பேரில் கடன் வாங்கும் வசதி உண்டா?

ஆம்! தினசரி வைப்புத் தொகையில் 60% வரை கடன் பெரும் வசதி உறுப்பினர்களுக்கு உண்டு.  சங்கத்தின் சட்ட விதிகளின் அடிப்படையில் கடனுக்கு வட்டி விதிக்கப்படும்.

பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதங்களில் சிறப்புச் சலுகைகள் ஏதேனும் உண்டா?

இல்லை! நிர்ணயிக்கப்பட்டுள்ள வட்டி விகிதமே அனைவருக்கும் வழங்கப்படும். சிறப்பு சலுகைகள் எதுவும் இல்லை.

தினசரி வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்

தினசரி சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில்,ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சொசைட்டி  தன் உறுப்பினர்களுக்கு  தினசர்  வைப்புத் திட்டத்தை வழங்குகிறது.  குறிப்பிட்ட காலத்திற்கு சினமும் சிறு சிறு தொகையாக உறுப்பினர்கள் இதில் சேமிக்கலாம். குறைந்தபட்சமாக ரூ.10இல் துவங்கி பின்னர் ரூ.5 இன் மடங்குகளில் இதில் சேமிக்கலாம்.

ஆதர்ஷ் கிரெடிட்டின் டிடிஸ் திட்டத்தில், நீங்கள் 1 ஆண்டு அல்லது 2 வருடத்திற்கு முதலீடு செய்யலாம். 1 வருடத் திட்டத்திற்கு 8% வட்டியும், 2 வருடத் திட்டத்திற்கு 10% வட்டியும் வழங்கப்படுகிறது. பிக்மி டெபாசிட் திட்டம் என பிரபலமாக அறியப்படும் இத்திட்டம் சேமிப்பு மட்டுமின்றி, உரிய காலத்திற்கு முன்பே முதிர்வு செய்யும் வசதி, கடன் பெரும் வசதிகளையும் கொண்டுள்ளது. வாருங்கள் சிறுகச் சிறுகச் சேர்ப்போம், பெருந்தொகையாய் மாற்றுவோம்!

உரிமைத்துறப்பு: அனைத்து நிதிசார் சேவைகள் பிரத்யேகமாக ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சொசைட்டி  உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

தினசரி சேமிப்பு பற்றி அறிய இன்றே தொடர்பு கொள்க.

Name
Email
Phone no
Message
© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.