சொசைட்டி உறுப்பினராதல்
எங்களிடம் உறுப்பினராக என்ன செய்யவேண்டும்?
ஆதர்ஷ் கிரெடிட் கோ-ஆபெரேடிவ் சொசைட்டி லிமிடட்.,-இன் உறுப்பினராக, நீங்கள் முதலில் சொசைட்டியின் ₹ 10 முகமதிப்புள்ள பங்கை சொசைட்டி மேலாண்மையின் ஒப்புதலுடன் வாங்க வேண்டும். இதன் மூலம், நீங்கள் நிறுவனத்தின் ஏ.ஜி.எம்-இல் (ஆண்டுப் பொதுக்கூட்டம்) பங்கேற்கும் உரிமை மட்டுமல்லாது பல உரிமைகளைகளைப் பெறுவீர்கள். சொசைட்டியின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா யோசனைகளையும் நீங்கள் வழங்கலாம். நமது சொசைட்டி, தங்கு தடையின்றி இயங்குவதாலும், எல்லா உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டுள்ளதாலும், “ஆதர்ஷ் பரிவார்”-இன் அங்கமாகவே அவர்களை நாங்கள் நடத்துகிறோம். இந்த முயற்சியின் மூலம், நாங்கள் ஒரே குடையின் கீழ் அனைத்து வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதன் மூலம் எங்களது உறுப்பினர்களுக்குத் தரமான வாழ்வியலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நிதி உதவி வழங்குகிறோம்.


யார் இந்த சொசைட்டியின் உறுப்பினராகலாம்?
18 வயது நிரம்பிய, வேறு எந்த கிரெடிட் கோ-ஆபரேடிவ் சொசைட்டியிலும் உறுப்பினரல்லாத, எந்த குற்ற நடவடிக்கை வாயிலாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாத, இந்தியாவில் மட்டும் வசிக்கும் (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் லக்ஷதீப் தவிர) எவரும் எங்கள் உறுப்பினராக தகுதியானவர்.
சொசைட்டியில் உறுப்பினராக என்ன செய்ய வேண்டும்?
உறுப்பினராக விரும்புபவர் சொசைட்டியின் உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை நிரப்பி, சொசைட்டியின் எந்த ஒரு கிளையிலோ அல்லது ஆதர்ஷ் பண மொபைல் ஆலோசகருக்கான விண்ணப்பத்தின் மூலமோ சரியான பிரதியுடன் ஆதார் கார்டு உட்பட கே.ஒய்.சி ஆவணங்கள் இணைத்து, கண்டிப்பாக குறைந்தது ஒரு பங்கின் மதிப்பான ₹ 10-க்கான பணத்தை செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தகுதியை சரிபார்த்த பிறகு விண்ணப்பதாரருக்கு ₹ 10 மதிப்புள்ள ஒரு பங்கு ஒதுக்கப்படும். உறுப்பினர் தங்களுக்கு தேவையான எத்தனை பங்குகளை வேண்டுமானாலும் சொசைட்டியின் ஒப்புதலுடன் வாங்கலாம்.
