தனியுரிமைக் கொள்கை

www.adarshcredit.in வலைத்தளத்தின் (“தளம்”) பயனர்களிடமிருந்து (ஒவ்வொரு, ஒரு “பயனர்”) பெறப்பட்ட தகவல்களைச் சேகரித்து, ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கம் லிமிடெட் பயன்படுத்தும், பராமரிக்கும் மற்றும் வெளிப்படுத்தும் விதத்தை இந்த தனியுரிமைக் கொள்கை நிர்வகிக்கிறது. தளம் மற்றும் ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கம் வழங்கும் அனைத்து நிதிசார் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கும் இந்த தனியுரிமைக் கொள்கை பொருந்தும்.

தனிப்பட்ட அடையாளங்காணல் பற்றிய தகவல்

நாங்கள் பல விதங்களில் பயனர்களின் தகவலைச் சேகரிக்க வாய்ப்புள்ளது.. அவற்றை பயனர்கள் எங்களுடைய தளத்தைப் பார்வையிடுகையில், தளத்தில் பதிவு செய்கையில், செய்திமடல் பெறுவதற்காக பதிவுசெய்கையில்,மதிப்பாய்வுகளுக்குப் பதிலளிக்கையில், படிவத்தை பூர்த்தி செய்கையில், மற்ற செயல்பாடுகள், சேவைகள், அம்சங்கள் அல்லது வளங்கள் பற்றி எங்கள் தளத்தில் நாங்கள் புதுப்பிக்கையிலோ அல்லது மற்ற வகைகளிலோ பயனர்களிடமிருந்து தனிப்பட்ட அடையாளங்காணல் தகவலைச் சேகரிக்கலாம். பயனர்களிடமிருந்து மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், சமூகப் பாதுகாப்பு எண் ஆகியவற்றை கேட்டறிய வாய்ப்புண்டு. எனினும், பயனர்கள் எங்கள் தளத்தை அநாமதேயமாகவும் பார்க்கவும் அனுமதி உண்டு. பயனர்கள் சுயவிருப்பத்தோடு எங்களுக்கு இத்தகவலைச் சமர்ப்பித்தால் மட்டுமே நாங்கள் தனிப்பட்ட அடையாளங்காணல்த் தகவலை சேகரிப்போம். பயனர்கள் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணல் தகவலை வழங்க மறுக்கலாம். அந்நிலையில் சில தள சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து அவர்கள் தடுக்கப்படலாம்.

தனிப்பட்டதல்லாத அடையாளங்காணல் தகவல்

பயனர்கள் எங்களுடைய தளத்துடன் தொடர்புகொள்ளும்போது நாங்கள் பயனர்களைப் பற்றிய தனிப்பட்டதல்லாத அடையாளங்காணல் தகவலை சேகரிக்கக்கூடும். தனிப்பட்டதல்லாத அடையாளங்காணல் தகவலில், உலாவியின் பெயர், கணினி வகை மற்றும் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் போன்ற தளத்துடன் இணைக்கப்படும் முறையில் பயனர் பற்றிய தொழில் நுட்ப தகவல். மற்றும் பிற தகவல் போன்றவை அடங்கும்.

வெப் பிரவுசர் குக்கிகள்

பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக எங்கள் தளம் “குக்கீகளை” பயன்படுத்தக் கூடும். பதிவுபேணல் நோக்கங்களுக்காகவும் சில நேரங்களில் அவர்களைப் பற்றிய தகவலைக் கண்காணிக்கவும் பயர் உபயோகிக்கும் வெப் பிரவுசர்கள் குக்கிகளை அவர்களது ஹார்ட் டிஸ்க்கில் சேமிக்கிறது. குக்கீகளை மறுப்பதற்கோ அல்லது குக்கிகள் அனுப்பப்படும்போது எச்சரிக்கை செய்யும்படியோ பயனர்கள் தங்கள் பிரவுசரை அமைக்கலாம். இந்நிலையில் தளத்தின் சில பகுதிகள் ஒழுங்காக செயல்படாது என்பதைக் கவனத்தில் கொள்க. .

சேகரிக்கப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம்

பயனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சங்கம் லிமிடெட் பின்வரும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம்:

  • உறுப்பினர் / களுக்கு வழங்கும் சேவையை மேம்படுத்த, உறுப்பினர்/கள் கோரும் சேவை கோரிக்கைகள் மற்றும் உதவித் தேவைகளுக்கு திறம்பட பதிலளிக்க உங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் உதவுகிறது.
  • பயனர் அனுபவத்தை தனிப்பயனாக்க
    பயனர்கள் ஒரு குழுவாக எங்களுடைய தளத்தில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாங்கள் திரட்டும் தகவல்களைப் பயன்படுத்தலாம்.
  • எங்கள் தளத்தை மேம்படுத்த
    எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்கு நீங்கள் வழங்கும் பின்னூட்டத்தை நாங்கள் பயன்படுத்தலாம்.
  • குறிப்பிட்ட இடைவெளிகளில் மின்னஞ்சல்களை அனுப்ப,
    பயனர் தகவல் மற்றும் மேம்படுத்தல்கள் போன்றவற்றை அனுப்ப நாங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தக்கூடும். பயனர்கள் எழுப்பும் விசாரணைகள், கேள்விகள், மற்றும்/அல்லது பிற கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவும் இதைப் பயன்படுத்தப்படலாம். எங்கள் மெயிலிங் லிஸ்டில் இணைய பயனர் முடிவுசெய்தால், நிறுவனத்தின் செய்திகள், புதுப்பிப்புகள், நிதிசார் பொருள்கள் அல்லது சேவை பற்றிய தகவல் ஆகியவற்றை உள்ளடக்கிய மின்னஞ்சல்களைப் பெறுவீர்கள். பயனர் மின்னஞ்சல்களைப் பெறுவதில் இருந்து விலக விரும்பினால், ஒவ்வொரு மின்னஞ்சலின் கீழ் பகுதியிலும் அளிக்கப்பட்டுள்ள விலகும் முறை பற்றிய விரிவான விவரங்களை உபயோகித்து விலகலாம் அல்லது தளத்தின் வழியாக பயனர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் தகவலை நாங்கள் எப்படிப் பாதுகாக்கிறோம்

உரிய தரவு சேகரிப்பு, சேமிப்பு மற்றும் செயலாக்க நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதின் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல், பயனர்பெயர், கடவுச்சொல், பரிவர்த்தனை தகவல் மற்றும் எங்கள் தளத்தில் சேமிக்கப்பட்ட தரவு இவற்றிற்கு அங்கீகரிக்கப்படாத அணுகல், மாற்றுதல், மறை வெளியீடு அல்லது அழிப்பு இவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பயனர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கும் விதமாக, PCI பாதிப்புத்தன்மை தரநிலைகளுக்கு இணக்கமாக எங்கள் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் தனிப்பட்ட தகவலைப் பகிர்தல்

பயனர்களின் தனிப்பட்ட அடையாளத் தகவல்களை நாங்கள் மற்றவர்களுக்கு விற்பதோ, வர்த்தகம் செய்வதோ அல்லது வாடகைக்கு விடுவதோ இல்லை. . பார்வையாளர்களின் தனிப்பட்ட தகவலோடு தொடர்பில்லாத மற்ற தொகுக்கப்பட்ட பொதுவான இனப்புள்ளி விவரங்களை எங்கள் வணிகப் பங்காளிகள், நம்பகமான இணையாளிகள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்

இந்த தனியுரிமைக் கொள்கையை தேவைப்படும்போது புதுப்பித்துக்கொள்ள ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சங்கம் லிமிட்டடுக்கு உரிமை உள்ளது. நாங்கள் மாற்றங்கள் செய்யும்போது, எங்கள் தளத்தின் முதன்மைப் பக்கத்தில் இது பற்றிய ஒரு அறிவிப்பை வெளியிடுவோம். அதோடு, இந்தப் பக்கத்தின் கீழே புதுப்பிக்கப்பட்ட தேதியை திருத்தி அது குறிந்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவோம். நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தகவலை பாதுகாக்க எப்படிப் பணியாற்றுகிறோம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த பக்கத்திற்கு அடிக்கடி வருகை தர உங்களை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அவ்வப்போது இந்த தனியுரிமைக் கொள்கையை மறுபரிசீலனை செய்து மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது உங்கள் பொறுப்பு என்பதை நீங்கள் அறிந்து ஏற்கிறீர்கள்.

இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்பது குறித்து

இந்த தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த கொள்கையையும் சேவை விதிமுறைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்தக் கொள்கையை நீங்கள் ஏற்கவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் தளத்தைப் பயன்படுத்த வேண்டாம். இந்தக் கொள்கையில் மாற்றங்களை இடுகையிட்ட பிறகும் இத்தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது, அந்த மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வதாகக் கருதப்படும்.

எங்களைத் தொடர்பு கொள்ள

தனியுரிமைக் கொள்கைகள், தளத்தின் நடைமுறைகள் அல்லது தளத்தை நீங்கள் கையாள்வது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் வினாக்களோ ஐயமோ இருந்தால் தயவு செய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்:

ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கம் லிமிடட்

www.adarshcredit.in
ஆதர்ஷ் பவன், 14 வித்யாவிஹார் காலணி, உஸ்மான்புரா, ஆஸ்ரம் ரோடு, அகமதாபாத். – 380013, மாவட்டம்: அகமதாபாத், மாநிலம்: குஜராத்.
தொலைபேசி : +91-079-27560016
ஃபேக்ஸ் : +91-079-27562815
info@adarshcredit.in
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 3000 3100