விரைவு இணைப்பு

திட்டமிட்ட முதலீட்டு திட்டம்

திட்டமிட்ட முதலீட்டு திட்டத்தில் (SIP ) உறுப்பினர்கள் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் தவணை முறையில் செலுத்தி ,கணக்கு முடிவுற்ற பின் , கணக்கு முடிவில் அவர்கள் ஒரு கூட்டு மொத்த தொகையை பெறுவர் ( ஆண்டு கூட்டல் ). ஆதர்ஷ் SIP கால அளவின் அடிப்படையில் ,SIP வட்டி வீதங்களை வழங்குகிறது .

₹ 100 மாத முதலீட்டிற்கு:

காலம் (மாதங்களில் )வட்டி வீதம்(( ஆண்டுக்கு % இல் )முதிர்வு தொகை (₹ 100)காலாண்டு மூதலீடு ₹ 1000 திற்கான முதிர்வு தொகைஅரையாண்டு மூதலீடு ₹ 1000 திற்கான முதிர்வு தொகை
1211.001,272.004,275.00NA
2411.502,696.009,068.004,595.00
3612.004,312.0014,510.007,356.00
4812.006,108.0020,551.0010,419.00
6012.508,221.0027,670.0014,036.00
7212.7510,610.0035,718.0018,122.00
12013.0023,660.0079,665.0040,431.00

ஜன 19, 2019 முதல் மேற்கண்ட வட்டி வீதங்கள் பொருந்தும்
*SIP திட்டங்கள் NACH மூலமும் கிடைக்கும் (தேசிய தானியங்கி தீர்வு மையம்)

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

திட்டமிட்ட முதலீட்டு திட்டத்தின் காலம் எவ்வளவு ?

திட்டமிட்ட வைப்பு நிதி 1,2,3,4,5,6 ஆண்டுகளிலிருந்து தொடங்கி 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய திட்டங்கள் உள்ளன .

திட்டமிட்ட வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை எவ்வளவு?

மாதாந்திர முதலீடு – திட்டமிட்ட வைப்பு நிதி திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீடு ₹ 1,00 ரூபாயும், அதன் பிறகு, ₹ 50 இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
காலாண்டு மற்றும் அரையாண்டு முதலீடு- திட்டமிட்ட வைப்பு நிதி திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீடு ₹ 1,000 ரூபாயும், அதன் பிறகு, ₹ 500 இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.

திட்டமிட்ட முதலீட்டு திட்டத்தில் ஒரு உறுப்பினர் எவ்வளவு வட்டி பெற இயலும் ?

கீழ்க்கண்டவாறு வட்டி வீதம் பெறலாம் :

 • 1 வருடம் – 11.00% ஆண்டு கூட்டு கணக்கீடு
 • 2 வருடங்கள் – 11.50% ஆண்டு கூட்டு கணக்கீடு
 • 3 வருடங்கள் – 12.00% ஆண்டு கூட்டு கணக்கீடு
 • 4 வருடங்கள் – 12.00% ஆண்டு கூட்டு கணக்கீடு
 • 5 வருடங்கள் – 12.50% ஆண்டு கூட்டு கணக்கீடு
 • 6 வருடங்கள் – 12.75% ஆண்டு கூட்டு கணக்கீடு
 • 10 வருடங்கள் – 13.00% ஆண்டு கூட்டு கணக்கீடு

திட்டமிட்ட வைப்பு நிதி திட்டத்தில் முதிர்வுறாமல் கணக்கை முடிக்க வசதி உள்ளதா ?

உறுப்பினர்கள் கீழ்கண்ட விதிகளின் படி முதிர்வுறாமல் தொகையை பெற இயலும்:

12 மாத திட்டத்திற்கு:

 • 6 மாதங்கள் வரை அனுமதியில்லை
 • 6 மாதத்திலிருந்து 9 மாதத்துக்குள் முன் முதிர்வு செய்து பணம் பெற்றால் ,வட்டி கிடையாது . 2% சேவை வரி மற்றும் ₹ 30/- எழுதுபொருள் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.
 • 9 மாதத்திலிருந்து 12 மாதத்துக்குள் முன் முதிர்வு செய்து பணம் பெற்றால் ,3% தனி வட்டி கிடைக்கும் . ₹ 50 எழுதுபொருள் கட்டணமாக வசூலிக்கப்படும்.

24 மாத திட்டத்திற்கு:

 • 12 மாதங்கள் வரை : முன் முதிர்வு செய்ய முடியாது
 • 12 மாதத்திலிருந்து 18 மாதங்கள் வரை : ஆண்டுக்கு 2% வட்டி வீதம்
 • 18 மாதத்திலிருந்து 24 மாதங்கள் வரை : ஆண்டுக்கு 3% வட்டி வீதம்

36 மாத திட்டத்திற்கு:

 • 18 மாதங்கள் வரை : முன் முதிர்வு செய்ய முடியாது
 • 18 மாதத்திலிருந்து 24மாதங்கள் வரை : ஆண்டுக்கு 2% வட்டி வீதம்
 • 24 மாதத்திலிருந்து 36 மாதங்கள் வரை : ஆண்டுக்கு 3% வட்டி வீதம்

48 மாத திட்டத்திற்கு:

 • 24 மாதங்கள் வரை : முன் முதிர்வு செய்ய முடியாது
 • 24 மாதத்திலிருந்து 36 மாதங்கள் வரை : ஆண்டுக்கு 2% வட்டி வீதம்
 • 36 மாதத்திலிருந்து 48 மாதங்கள் வரை : ஆண்டுக்கு 3% வட்டி வீதம்

60 மற்றும் 72 மாத திட்டத்திற்கு:

 • 36 மாதங்கள் வரை : முன் முதிர்வு செய்ய முடியாது
 • 36 மாதங்களுக்கு பிறகு: ஆண்டுக்கு 3% வட்டி வீதம்

120 மாத திட்டத்திற்கு:

 • 60 மாதங்கள் வரை : முன் முதிர்வு செய்ய முடியாது
 • 60 மாதங்களுக்கு பிறகு: ஆண்டுக்கு 3% வட்டி வீதம்

திட்டமிட்ட வைப்பு நிதி திட்டத்தில் கடன் பெற வேறு வசதிகள் உள்ளனவா ?

கடன் வசதி கீழ்கண்ட விதிகளின் படி கிடைக்கும் :-

வழக்கமான மாதாந்திர SIP திட்டம்:

(A) 12 மற்றும் 24 மாத திட்டத்திற்கு:
6 மாதங்களிற்கு பிறகு (6 தவணைகள் செலுத்திய பிறகு): முதலீட்டு தொகையில் 60% வரை

(B) 36 மற்றும் 48 மாத திட்டத்திற்கு:
12 மாதங்களிற்கு பிறகு (12 தவணைகள் செலுத்திய பிறகு): முதலீட்டு தொகையில் 60% வரை

(C) 60 மற்றும் 72 மாத திட்டத்திற்கு:
24 மாதங்களிற்கு பிறகு (24 தவணைகள் செலுத்திய பிறகு): முதலீட்டு தொகையில் 60% வரை

(D) 120 மாத திட்டத்திற்கு:
60 மாதங்களிற்கு பிறகு (60 தவணைகள் செலுத்திய பிறகு): முதலீட்டு தொகையில் 60% வரை

காலாண்டு SIP திட்டம் :

(அ) 12 மற்றும் 24 மாத திட்டத்திற்கு:
6 மாதங்களிற்கு பிறகு (2 தவணைகள் செலுத்திய பிறகு): முதலீட்டு தொகையில் 60% வரை

(பி) 36 மற்றும் 48 மாத திட்டத்திற்கு:
12 மாதங்களிற்கு பிறகு (4 தவணைகள் செலுத்திய பிறகு): முதலீட்டு தொகையில் 60% வரை

(சி) 60 மற்றும் 72 மாத திட்டத்திற்கு:
24 மாதங்களிற்கு பிறகு (8 தவணைகள் செலுத்திய பிறகு): முதலீட்டு தொகையில் 60% வரை

(டி) 120 மாத திட்டத்திற்கு:
60 மாதங்களிற்கு பிறகு (20 தவணைகள் செலுத்திய பிறகு): முதலீட்டு தொகையில் 60% வரை

அரையாண்டு SIP திட்டம் :

(அ) 24, 36 மற்றும் 48 மாத திட்டத்திற்கு :
12 மாதங்களிற்கு பிறகு (2 தவணைகள் செலுத்திய பிறகு): முதலீட்டு தொகையில் 60% வரை

(பி) 60 மற்றும் 72 மாத திட்டத்திற்கு :
24 மாதங்களிற்கு பிறகு (4 தவணைகள் செலுத்திய பிறகு): முதலீட்டு தொகையில் 60% வரை

(சி) 120 மாத திட்டத்திற்கு :
60 மாதங்களிற்கு பிறகு (10 தவணைகள் செலுத்திய பிறகு): முதலீட்டு தொகையில் 60% வரை

ஏதேனும் சிறப்பு வட்டி வீதம் உள்ளனவா ?

இல்லை ! இதில் வட்டி வீதம் நிலையானது .எனவே மகளிர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு லாபகரமான சலுகைகள் இல்லை

திட்டத்தில் தவணை தொகையை செலுத்தாவிடில் அபராத தொகை என்ன ?

மாத தவணை – மாத தவணையை ஒழுங்காக செலுத்தாவிடில் ,மாதத்திற்கு ₹ 100 க்கு ,₹ 1.50 வசூலிக்கப்படும் .
காலாண்டு – காலாண்டு தவணையை ஒழுங்காக செலுத்தாவிடில் ,மாதத்திற்கு ₹ 100 க்கு ,₹ 4.50 வசூலிக்கப்படும் .
அரையாண்டு- அரையாண்டு தவணையை ஒழுங்காக செலுத்தாவிடில் ,மாதத்திற்கு ₹ 100 க்கு ,₹ 9 வசூலிக்கப்படும் .

SIP இல் அதிகப்படியான வட்டி வீதங்களை பெறுங்கள்

ஆதர்ஷ் கூட்டுறவு கடன் சங்கம் சிறந்த பயனுள்ள நிதி திட்டங்களை வழங்குகிறது .உங்களுக்கு சிறந்த வட்டி வீதத்தையே SIP வழங்குகிறது . SIP மற்ற முதலீட்டு திட்டங்களை போன்றதாகும். இந்த திட்டத்திலும் ,மிகச் சிறந்த SIP வட்டியை நாங்கள் வழங்குகிறோம் .

SIP திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், மூன்று விதமான திட்டங்கள் உள்ளன :

 • மாதாந்திரம் : ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தவணை தொகையை செலுத்த வேண்டும் .
 • அரையாண்டு : ஒவ்வொரு அரையாண்டும் குறிப்பிட்ட தவணை தொகையை செலுத்த வேண்டும் .
 • காலாண்டு : ஒவ்வொரு காலாண்டும் குறிப்பிட்ட தவணை தொகையை செலுத்த வேண்டும்.

நீங்கள் தேர்ந்து எடுக்கும் SIP திட்டத்தில் , தவணை முறையில் தொகையை செலுத்தி ,முதிர்வில் கூட்டு தொகையாக பெறலாம் . SIP வட்டி வீதம் பல விதமான திட்டங்களுக்கு ( கால அளவிற்கு ஏற்றபடி ) உயர்வானதாகவும் ,உத்திரவாதமானதாகவும் உள்ளது .எங்களது SIP வட்டி வீதம் 11% முதல் 13% வரை உள்ளது .இந்த SIP திட்டங்களை NACH மூலமும் பெறலாம் .

பொறுப்பு துறப்பு: இந்த திட்டத்தின் பலன்களும் ,சேவைகளும், ஆதர்ஷ் கடன் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே உரியது.

திட்டமிட்ட முதலீட்டு திட்டத்தை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

Name
Email
Phone no
Message
© Copyright - Adarsh Credit. 2018 All rights reserved. Designed and developed by Communication Crafts.