உரிமை மறுப்பு:

பல்மாநிலக் கூட்டுறவு சங்கங்கள் மத்திய பதிவாளர், வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருவதில்லை. இவை தன்னாட்சிக் கூட்டுறவு அமைப்புக்களாக தங்கள் உறுப்பினர்களுக்குப் பொறுப்புணர்வோடு சேவை புரிந்து வருகின்றன. எனவே, சங்கத்தின் செயல்திறனை அடிப்படையாக வைத்து வருவிளைவைக் கணக்கிட்டு முடிவெடுக்க முதலீடு செய்வோர்/ உறுப்பினர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மத்தியப் பதிவாளர், வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன் அமைச்சகம் இந்த வைப்புகளுக்கு உத்தரவாதம் வழங்குவதில்லை..

பொது நிபந்தனை

ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கம் லிமிடெட் சேவை விதிமுறைகள் (“ஒப்பந்தம்”)
இந்த ஒப்பந்தம் இறுதியாக ஜனவரி 09, 2014 திருத்தியமைக்கப்பட்டது.

ஆதர்ஷ் (“எங்கள்”, “நாங்கள்” அல்லது “எமது”) மூலம் இயக்கப்படும் adarshcredit.in (“தளம்”) ஐப் பயன்படுத்துவதற்கு முன்னர் இந்த சேவை விதிமுறைகளை (“ஒப்பந்தம்”, “சேவை விதிமுறைகள்”) கவனமாகப் படிக்கவும். adarshcredit.in தளத்தை நீங்கள் பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வமான கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்துகிறது.

சொற்கூறுகள் பேரெழுத்தில்இந்த ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த இணையதளத்தில் புதுப்பிக்கப்படும் எந்தவொரு தகவலும் ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் வருங்கால உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே.

பொதுமக்களின் பயனிற்காக எந்த தகவலையும் வழங்கவோ அல்லது வெளியிடவோ சங்கம் உத்தேசிக்கவில்லை.

அறிவார்ந்த சொத்து

தளம் மற்றும் அதன் அசல் உள்ளடக்கம், அம்சங்கள் மற்றும் செயல்பாடு ஆதர்ஷுக்குச் சொந்தமானது மற்றும் சர்வதேச பதிப்புரிமை, வர்த்தகச் சின்னம், காப்புரிமை, வர்த்தக மறையம் மற்றும் பிற அறிவுசார் சொத்து அல்லது தனியுரிமை உரிமைச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது..

முடிவுறுத்தல்
இவ்வித காரணமோ, முன்னறிவிப்போ இன்றி இந்தத் தளத்தை நீங்கள் அணுகுவதற்கான உரிமையை நாங்கள் மறுக்க இயலும். இதன் காரணமாக உங்களைச் சார்ந்த தகவல்கள் அழிக்கப்படலாம் அல்லது பறிப்பிழப்பகலாம். இந்த ஒப்பந்தத்தின் அனைத்து வகைமுறைகளும், அவற்றின் இயல்பால் முடிவுக்கு வரக்கூடாது என்றிருந்தால் அவை முடிவுக்கு வராது. அவற்றில் வரம்புகளேதுமின்றி உரிமையாளர் வகைமுறைகள், உத்தரவாத உரிமை மறுப்புகள், ஈட்டுறுதி, இழப்பீடு மற்றும் பொறுப்பு வரம்புகள் ஆகியவை அடங்கும்.

மற்ற தளங்களுக்கு இணைப்புகள்

எங்கள் தளத்திலிருந்து மற்ற மூன்றாம் தரப்புத் தளங்களுக்கு இணைப்புகள் இருக்கலாம். அத்தளங்கள் ஆதர்ஷுக்குச் சொந்தமானதோ அல்லது கட்டுப்படுத்தப்படுவதோ அல்ல.

எந்தவொரு மூன்றாம் தரப்பு தளங்கள் அல்லது சேவைகளின் உள்ளடக்கம், தனியுரிமைக் கொள்கைகள் அல்லது நடைமுறைகள் ஆகியவற்றின் மேல் ஆதர்ஷுக்கு எவ்விதக் கட்டுப்பாடுமில்லை மேலும் எவ்வித பொறுப்பும் இல்லை. நீங்கள் பார்வையிடும் மூன்றாம் தரப்புத் தளங்களின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளையும் படித்தறிய நாங்கள் வலுவாக பரிந்துரைக்கிறோம்.

நிர்வக விதி

இந்த ஒப்பந்தம் (மற்றும் இனிவரும் குறிப்பு மூலம் சேர்க்கப்பட்ட விதிகள், கொள்கைகள் அல்லது வழிகாட்டுதல்களுடன்) சட்டத்தின் முரண்பாடுகளினால் ஏற்படும் அனுமானங்களுக்கு எவ்வித விளைவுகளுமின்றி அகமதாபாத் (குஜராத்) நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டு இந்தியாவின் சட்ட விதிகளுக்கு ஏற்ப நிர்வகிக்கப்படும்.

ஒப்பந்தத்தில் மாறுதல்கள்

தளத்தில் மேம்படுத்தப்பட்ட விதிவிதிமுறைகளை இடுவதன் மூலம், எங்கள் விருப்பப்படி, சேவை விதிகளில் திருத்தம் செய்ய அல்லது மாற்ற எங்களுக்கு முழு உரிமை உண்டு. மேற்படி மாறுதல்களுக்குப் பின்னும் நீங்கள் தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவது புதிய சேவை விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதாய் அமைகிறது.

இந்த ஒப்பந்தத்தை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து மாற்றங்களிருப்பின் அறியவும். இந்த ஒப்பந்தத்தின் எந்தவொரு உடன்படிக்கையையும் அல்லது இந்த ஒப்பந்தத்தில் ஏற்படும் மாற்றங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தால், இத் தளத்தை உபயோகிக்கவோ, அணுகவோ, தொடரவோ வேண்டாம் மேலும் உடனடியாக தளத்தை எதற்கும் உபயோகிப்பதை நிறுத்தவும்.

வெளிப்புற நிதி பரிமாற்றம் (NEFT) வரையறைகள்

வரையறைகள்

 • உறுப்பினர் வாடிக்கையாளர், நான், நாங்கள், நானே,என்னுடைய, எங்களுக்கு என்பது ஒருமையிலோ பன்மையிலோ இங்கு NEFT வசதியை உபயோகிப்பவரின் பெயரைக் குறிக்கிறது.
 • “சங்கம்” என்பது “ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கம் லிமிடெட்”.
 • “வங்கி சேவை வழங்குபவர்” என்பது இந்தியாவிலுள்ள ஷெட்யூல்ட் அல்லது ஷெட்யூலில் இல்லாத வங்கிகளைக் குறிக்கும்.
 • “NEFT வசதி” என்பது RBI NEFT அமைப்பு மூலம் வழங்கப்படும் தேசிய மின்னணு நிதிப் பரிமாற்ற வசதி ஆகும்
 • “பாதுகாப்பு விதிமுறைகள்” என்பது பணமாற்றத்துக்கான ஆணை, மின்னணு முறையில் அனுப்பட்ட உறுப்பினர் வாடிக்கையாளரின் பணமாற்றத்துக்கான ஆணையில் ஏற்படும் திருத்தங்கள் அல்லது ரத்து அல்லது உறுப்பினர் வாடிக்கையாளரின் பணமாற்றத்துக்கான ஆணை அல்லது தகவலின் உள்ளடக்கத்தைப் பரிமாற்றம் செய்வதில் உள்ள பிழை கண்டுபிடிக்கப்படுதல் இவற்றை உறுதி செய்ய சங்கம், வங்கி சேவை வழங்குபவர் மற்றும் உறுப்பினர் வாடிக்கையாளர் இவர்களிடையே நிறுவப்பட்ட செயல்முறை எனப் பொருளாகும். பாதுகாப்பு செயல்முறைக்கு, வழிமுறைகள் அல்லது பிற குறியீடுகளைப் பயன்படுத்துதல், வார்த்தைகளை அல்லது எண்களை அடையாளம் காணுதல், மறையாக்கம், திரும்பப்பெறும் நடைமுறைகள் அல்லது ஒத்த பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவை தேவைப்படலாம்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் நோக்கம்

 • NEFT வசதிகளின் கீழ் சங்கத்தின் வங்கி சேவை வழங்குநரால் உறுப்பினர் வாடிக்கையாளர் வழங்கிய ஒவ்வொரு பணமாற்றத்துக்கான ஆணைக்கும் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.
 • இங்கு குறிப்பிட்டுள்ளவை எவையும், சங்கம் தவிர ரிசர்வ் வங்கி அல்லது NEFT அமைப்பில் பங்கேற்போர் அல்லது வங்கிக் சேவைகள் வழங்குநருக்கு எதிராக எவ்வித ஒப்பந்தம் அல்லது மற்ற உரிமைகளை உருவாக்கும் விதத்தில் பொருள் கொள்ளமுடியாது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார்.

தொடக்கம் மற்றும் முடிவு

 • NEFT க்கான ஒரு வேண்டுகோளை உறுப்பினர் வாடிக்கையாளர் அளித்தவுடனோ மற்றும் / அல்லது சங்கம் மற்றும் உறுப்பினர் வாடிக்கையாளர் இடையே ஏற்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் காரணமாக பாதுகாப்பு செயல்முறை நிறுவப்பட்டவுடனோ இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்
 • இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் உறுப்பினர் வாடிக்கையாளர் மேல் செல்லுபடியாகும் மற்றும் கட்டுப்படுத்தும்.
 • உரிய அறிவிப்பை வழங்குவதன் மூலம், சங்கம் NEFT வசதியை திரும்ப பெற முடியும் என்பதை நான்/நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

உறுப்பினர் வாடிக்கையாளரின் உரிமைகள் மற்றும் கடமைகள்

 • வங்கி சேவை வழங்குனர் மூலம் இங்குள்ள மற்ற விதிமுறைகள் நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்ற சங்கத்திற்கு பணமாற்றத்துக்கான ஆணையை வழங்க உறுப்பினர் வாடிக்கையாளர் தகுதி பெற்றுள்ளார்
 • அனைத்து விவரங்களும் முழுமையாக குறிக்கப்பட்ட படிவத்தின் மூலம் பணமாற்றத்துக்கான ஆணையை உறுப்பினர் வாடிக்கையாளர் வழங்க முடியும். பணமாற்றத்துக்கான ஆணையில் வழங்கப்பட்டுள்ள விவரங்களின் துல்லியத்திற்கு உறுப்பினர் வாடிக்கையாளரே பொறுப்பாவார் மற்றும் அவர் அளித்த பணமாற்றத்துக்கான ஆணையில் உள்ள பிழை காரணமாக சங்கத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கும் பொறுப்பாவார்.
 • பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்கியும் முழு நம்பிக்கையோடும் சங்கம் பணமாற்றத்துக்கான ஆணையை நிறைவேற்றியிருந்தால், சங்கம் நிறைவேற்றிய அந்த பணமாற்றத்துக்கான ஆணைக்கு உறுப்பினர் வாடிக்கையாளர் கட்டுப்பட்டவராவார்
 • பணமாற்றத்துக்கான ஆணையை சங்கம் நிறைவேற்றிய நிலையில் உறுப்பினர் வாடிக்கையாளரின் கணக்கில் தேவையான தொகை இல்லாவிடில் பணமாற்றத்துக்கான ஆணையின் பேரில் சங்கம் நிறைவேற்றிய NEFT க்காக அவரது கணக்கில் பற்று வைக்கப்பட்ட தொகை மற்றும் வட்டி இவற்றை சங்கத்திற்கு வழங்க உறுப்பினர் வாடிக்கையாளர் கட்டுப்படுகிறார்.
 • உறுப்பினரால் வாடிக்கையாளர் வழங்கிய பணமாற்றத்துக்கான ஆணையை சங்கம் நிறைவேற்றுகையில் அவரால் சங்கதிற்கு இழப்பு ஏற்பட்டால், சங்கம் அவ்விழப்பை அவரது கணக்கில் பற்று வைக்க உறுப்பினர் வாடிக்கையாளர் பற்றுறுதி வழங்குகிறார்.
 • வங்கி வாடிக்கையாளர் சேவை வழங்குநரின் மூலமாக சங்கத்தால் நிறைவேற்றப்படும் பணமாற்றத்துக்கான ஆணை மாற்ற இயலாதது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்கிறார்.
 • பாதுகாப்பு நடைமுறைக்கு இணக்கமின்றி வழங்கப்படும் எந்தவொரு ரத்து அறிவிப்பும் சங்கத்தைக் கட்டுப்படுத்தாது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்கிறார்.
 • சங்கத்தின் வங்கி சேவை வழங்குனர் தவிர ரிசர்வ் வங்கியின் NEFT அமைப்பில் உள்ள எத்தரப்பினருக்கும் எதிராக எவ்வித உரிமை கோரிக்கையும் எழுப்ப தனக்கு உரிமையில்லை என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்கிறார்.
 • பணப் பரிமாற்றத்தில் ஏற்படும் தாமதம் அல்லது பணமாற்றத்துக்கான ஆணையின் பேரில் பணப் பரிமாற்றத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட பிழை காரணமாக ஏற்படும் இழப்பு போன்ற நிகழ்வுகளுக்கு தாமதமான காலத்திற்கு சங்க வட்டி விகித முறைப்படி வட்டி வழங்குவது மற்றும் பிழைகளால் ஏற்பட்ட நஷ்டம், சங்க ஊழியரின் அலட்சியம் அல்லது பிழையினால் ஏற்பட்ட நஷ்டம் இவற்றிற்கு, பணம் திருப்பும் நாள் வரை சங்கம் நிர்ணயித்த வட்டி விகிதத்தோடு பரிமாற்றத் தொகையைத் திரும்பச் செலுத்துவது இவற்றிற்கு மட்டுமே சங்கம் கட்டுப்பட்டுள்ளது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்கிறார். வங்கி சேவை வழங்குனரால் ஏற்படும் பிழை, அவரது ஊழியரின் அலட்சியம் அல்லது மோசடியால் ஏற்படும் நஷ்டத்திற்கு சங்கம் காரணமாகாது மற்றும் சங்கத்தின் மேல் உரிமை கோர முடியாது.
 • இந்த ஒப்பந்தத்தின்படி NEFT வசதியின்கீழ் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு பணமாற்றத்துக்கான ஆணையையும் எந்தவொரு சூழ்நிலையிலும் இணைக்கமாட்டேன் என உறுப்பினர் வாடிக்கையாளர் உறுதி அளிக்கிறார் மற்றும் ஒப்பந்தமீறல் மற்றும் மற்றவைக்கு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள உட்கூறு (9)ன் படி அனுமதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக எந்தவொரு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படமாட்டது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்கிறார்.

சங்கத்தின் உரிமைகள் மற்றும் கடமைகள்

 • கீழ்கண்டவை தவிர மற்ற நிலைகளில் உறுப்பினர் வாடிக்கையாளர் முறையாக அளித்த பணமாற்றத்துக்கான ஆணையை பாதுகாப்பு செயல்முறை மூலம் உறுதி செய்தபின் சங்கம் நிறைவேற்றும்
  A. உறுப்பினர் வாடிக்கையாளரின் கணக்கில் தேவையான நிதி இல்லாத நிலை அல்லது பணமாற்றத்துக்கான ஆணைக்கு இணங்கி சரியாகப் பொருந்தாமை மற்றும் கட்டணம் செலுத்துவதற்கு உறுப்பினர் வாடிக்கையாளர் வேறு எந்த ஏற்பாடும் செய்யாத நிலை.
  B. பணமாற்றத்துக்கான ஆணை பூர்த்தியாக நிரப்பப்படாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிவத்தில் அளிக்கப்படாத நிலை.
  C. எவ்வித சிறப்பு சூழ்நிலையிலும் அறிக்கை மூலம் பணமாற்றத்துக்கான ஆணை இணைக்கப்ப்பட்டிருத்தல்.
  D. சட்டவிரோதமான பரிவர்த்தனை ஒன்றை நிறைவேற்றுவதற்காக பணமாற்றத்துக்கான ஆணை வழங்கப்பட்டிருப்பதாக சங்கம் நம்பும் நிலை.
  E. RBI. NEFT அமைப்பின் கீழ் பணமாற்றத்துக்கான ஆணையை செயல்படுத்த முடியாத நிலை.
 • சங்கம் மற்றும் அதன் வங்கி சேவை வழங்குநர் ஏற்றுக் கொள்ளும் வரை உறுப்பினர் வாடிக்கையாளர் அளித்த பணமாற்றத்துக்கான ஆணைக்கு சங்கம் கட்டுப்பட்டதல்ல.
 • சங்கம் பணமாற்றத்துக்கான ஆணையை நிறைவேற்றும் நிலையில் கணக்கில் தேவையான நிதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறுப்பினர் வாடிக்கையாளரின் நிர்ணயிக்கப்பட்ட கணக்கில் தொகையை பற்று வைக்கவும், செலுத்தப்படவேண்டிய கட்டணங்களுடன் பணப் பரிமாற்றம் செய்யவும் சங்கத்திற்கு உரிமை உண்டு.
 • வங்கி வாடிக்கையாளர் சேவை வழங்குனரிடமிருந்து பெறப்படும் NEFT வசதி உறுப்பினர் வாடிக்கையாளரின் இழப்புப் பொறுப்பில் பெறப்படுகிறது என்பதை உறுப்பினர் வாடிக்கையாளர் ஏற்கிறார். இப் பொறுப்பில் கடவுச்சொல்லைத் தகாத வழியில் பயன்படுத்துதல், இணைய மோசடி, தவறுகள் & பிழைகள், தொழில்நுட்ப அபாயங்கள், ஆகியவை மட்டுமல்லாது மற்றவையும் அடங்கும். குறிப்பிடப்பட்டுள்ள இடர்களுக்கு சங்கமோ அல்லது அதன் வங்கி சேவைகள் பங்குதாரரோ பொறுப்பு அல்ல என்பதை வாடிக்கையாளர் உறுப்பினர் அறிந்து ஏற்கிறார்..

பரிவர்த்தனைக்கான நிபந்தனைகள்

 • எலெக்ட்ரானிக் செய்திகளின் அனுப்பீட்டு முறையில் டெலிவரியின் போது ஏற்படும் தாமதம் அல்லது இழப்பு அல்லது தவறுகள்,விடுபடுதல் அல்லது அனுப்பீட்டு முறையில் அல்லது டெலிவரியில் தவறுகள் அல்லது ஏதாவது காரணத்தால் செய்திகள் டீ-ஃசைபர் செய்யப்படுதல் அல்லது தவறான விளக்கம் பெறுதல் அல்லது கட்டுப்பாட்டை மீறிய நடவடிக்கைகள் இவற்றிற்கு சங்கம் பொறுப்பாகாது.
 • அனைத்து கட்டண வழிமுறைகளும் உறுப்பினர் வாடிக்கையாளரால் கவனமாகச் சரிபார்க்கப்பட வேண்டும்.
 • நிதி பரிமாற்ற கோரிக்கையை சங்கத்தின் பணி நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை அளிக்கலாம்.
 • வெளியிடப்பட்ட மற்றும் சுற்றறிக்கை மூலம் மாறுதல் செய்யப்பட்ட கட்டண அட்டவணைப்படி பரிவர்த்தனைக் கட்டணங்கள் விதிக்கப்படும்

அறிவிப்புகள், மத்தியஸ்தம் மற்றும் அதிகார வரம்பு

 • உறுப்பினர் வாடிக்கையாளர் மற்றும் சங்கத்திற்கு இடையிலான அனைத்து அறிவிப்புகள் மற்றும் பிற தகவல்கள் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள சங்கத்தின் முகவரிக்கு பதிவுசெய்யப்பட்ட அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும்.
 • வங்கியின் சேவை வழங்குநரால் வழங்கப்படும் NEFT சேவைகள் காரணமாக எவ்வித சர்ச்சை எழுந்தாலும், அத்தகைய விவாதம், மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்டம் 1996ன் விதிமுறைகளின்படி மத்தியஸ்த ஸ்தலம் அகமதாபாத், குஜராத்தில், சங்கம் நியமனம் செய்த நடுவரால் இணக்கமாக தீர்க்கப்பட வேண்டும்.

எங்களைத் தொடர்புகொள்ள

இந்த ஒப்பந்தம் பற்றி உங்களுக்கு வினாக்கள் இருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
ஆதர்ஷ் கூட்டுறவுக் கடன் சங்கம்

ஆதர்ஷ் கிரெடிட் கூட்டுறவு சங்கம் லிமிடெட்

www.adarshcredit.in
ஆதர்ஷ் பவன், 14 வித்யாவிஹார் காலணி, உஸ்மான்புரா, ஆஸ்ரம் ரோடு, அகமதாபாத். அஞ்சல் குறியீடு 380013, மாவட்டம்: அகமதாபாத், மாநிலம்: குஜராத்.
தொலைபேசி: +91-079-27560016
ஃபேக்ஸ்: +91-079-27562815
info@adarshcredit.in

கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 3000 3100